மது போதையில் கார் ஓட்டிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர்..!

மது போதையில் கார் ஓட்டிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பொலோசி. இவரது கணவர் பால் பொலோசி (வயது 82). இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை இரவு கலிபோர்னியா மாகாணம் நபா நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வேகமாக வந்த காரை மறித்த போலீசார் காருக்குள் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலோசியின் கணவர் பால் பொலோசி இருப்பதை அறிந்தனர். அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். பால் பொலோசி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது குடித்துவிட்டு கார் ஓட்டிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பால் பொலோசி இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டில் 5 ஆயிரம் டாலர்கள் பிணை தொகை செலுத்தப்பட்டதை தொடர்ந்து பால் பொலோசிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து பால் பொலோசி விடுவிக்கப்பட்டார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!