அம்மா அட்ஜெஸ்ட் செய்தாலும் போதும்… பிரபல சீரியல் நடிகை பகீர் பேட்டி!

பிரபல நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.

மேலும், இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகினார். அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி என்ற தொடரில் முக்கிய வேடத்தில் ஸ்ரீநிதி நடித்திருந்தார். அதற்குப் பிறகு படங்கள், மியூசிக் வீடியோ என்று ஸ்ரீநிதி நடித்துக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த செந்தூரப்பூவே என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ஸ்ரீநிதி. இந்த தொடரின் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. மேலும், இவர் சீரியலில் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இருந்தார்.

தற்போது இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த கேள்விக்கு ’நான் சிறு வயதிலேயே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பிரச்சினையை சந்தித்து உள்ளேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க என்னை அழைத்தனர்.
.
அப்போது அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று அந்த படத்தின் பிரபலம் ஒருவர் கூறியதாக ஷாக்கிங் தகவலை தெரிவித்துள்ளார். தனக்கு அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் என்னவென்று அந்த வயதில் புரியவில்லை என்றும், நாங்கள் யோசிப்பதை பார்த்து ’மகள் அட்ஜெஸ்ட் பண்ணவில்லை என்றால் கூட பரவாயில்லை, அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும் என்று கூறியது தன்னுடைய அம்மாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ’நாங்கள் அந்த மாதிரி ஃபேமிலி இல்லை’ என்று கூறிவிட்டு அம்மா என்னை அழைத்துக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறினார். இதே மாதிரி பல பேர் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான் படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரீநிதி. அவரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!