ஜெயலலிதா கையால் தங்கச் சங்கிலி பரிசு பெற்ற பிரபல பாடகி திடீர் மரணம்!

பிரபல பின்னணி பாடகியான சங்கீதா சஜித் உடல் நலக்குறைவானால் காலமானார். அவருக்கு வயது 46.

கேரளாவை சேர்ந்தவர் பிரபல பாடகி சங்கீதா சஜீத். 46 வயதான இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். சிறு நீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்து சங்கீதா சஜீத், திருவனந்தப்புரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
யாருக்கும் தலை குனியாத ஆட்சி – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூரிப்பு!

இந்நிலையில் நேற்று காலை சங்கீதா சஜீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடைசியாக பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள குருதி படத்தில் பாடியுள்ளார் சங்கீதா. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் சங்கீதா சஜீத்.


தமிழில் பிரபு தேவா நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் பெரும் ஹிட்டானது. சமீப காலத்தில் அவர் பாடிய பாடல்களில் அய்யப்பனும் கோஷியும் படத்தில் இடம்பெற்ற தாளமும் பொய் தப்பும் பொய் பால் காக்ககுயில் படத்தில் இடம்பெற்ற அலறே கோவிந்தா ஆகிய பாடல்கள் பெரும் ஹிட்டடித்தன.

பழசி ராஜா திரைப்படத்தின் ஓடத்தண்டில் தாளம் கொட்டும் மற்றும் ராக்கிலிப்பட்டில் இருந்து தும் தும் தூரேதோ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதோடு மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற தமிழ் நாடு திரைப்பட விருது விழாவில் ஞானபழத்தை பிழிந்து பாடலை பாடினார் சங்கீதா.
D Imman: புதுசா வந்த 2 நாய்கள் இவங்கதான்… இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மீண்டும் டிவிட்!

அவரது குரலை கேட்டு நெகிழ்ந்துப் போன ஜெயலலிதா அவருக்கு 10 பவுனில் தங்கச்சங்கிலி பரிசிளித்தாக கூறப்படுகிறது. மிக இளம் வயதிலேயே பாடகி சங்கீதா சஜீத் மரணமடைந்தது மலையாள சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா மற்றும் இசைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!