கேரள லாட்டரியில் ஏழை தொழிலாளிக்கு அடித்த அதிஸ்டம்.. எவ்வளவு தெரியுமா..?

ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ளது.

கேரளாவில் அரசே நடத்தும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.

இதில் காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இதில் ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 51) என்ற தொழிலாளிக்கு முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்திருப்பது தெரிய வந்தது.

அரூரில் சண்முகம், ஒரு அறை மட்டுமே கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் அவருடன் மனைவி, 2 மகன்கள் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

லாட்டரியில் முதல் பரிசாக ரூ.80 லட்சம் கிடைத்தது பற்றி தெரியவந்ததும், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பரிசு பணத்தை கொண்டு புதிய வீடு கட்டுவேன் என்றும் கூறினார்.

சண்முகம் பரிசு விழுந்த சீட்டுடன் சேர்த்து மேலும் 4 சீட்டுகள் எடுத்து இருந்தார். இந்த சீட்டுகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 8 ஆயிரம் கிடைத்தது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!