மாணிக்கம், சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தவர், வனிதா விஜயகுமார். இவர், நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் ஆவார். இவருக்கும், நடிகர் ஆகாசுக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதையடுத்து வனிதா விஜயகுமார் ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர் மூலம் வனிதா விஜயகுமாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார், ஆனந்தராஜை விட்டு பிரிந்தார். இதனையடுத்து வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார் அந்த குடும்ப வாழ்க்கையும் அவருக்கு கசந்தது. பீட்டர்பால் ரொம்ப தப்பு பண்றாரு.. ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மலக தனது ஆதங்கத்தை கூறினார்.
இந்தநிலையில் யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தளங்களிலும் கலக்கி வரும் வனிதா இன்ஸ்டாவிலும் செம ஆக்டீவாக இருப்பார். அன்றாட நிகழ்வுகள், சினிமா அப்டேட்கள் என அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில் தான் பின்பற்றும் மதம் குறித்த அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நான் சில வருடங்களுக்கு முன்பே புத்த மதத்தை பின்பற்றினேன். அதற்கு பின் அதைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய எதுவுமே இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும் புத்திசம், கோவில் பயணம் போன்ற ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!