பெண்கள் மெனோபாஸ் காலத்தில் கவனிக்க வேண்டியவை!

மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம்.

பெண்களுக்கு 40 வயது தொடங்கும் போதே மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலமும் தொடங்கி விடுகிறது. மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம்.

மெனோபாஸ் காலம் எப்போது தொடங்கும்-

பெண்களுக்கு 40 வயதில் இருந்து 55 வயதிற்குள் மெனோபாஸ் காலம் தொடங்குகிறது. மாதவிடாய் காலத்தில் இருக்கும் உடற்சோர்வும், மனச்சோர்வும்மெனோபாஸ் காலத்தில் தொடக்கத்தில் இருக்கும். இதை கடந்து வருவதும் அதற்கு தயாராக இருப்பதும் எளிதானதுததான். பயம், கொள்ள வேண்டாம் என்கிறார்கள் மருத்தவர்கள்.

மெனோபாஸ் காலத்தில் என்ன நடக்கும்?

பெண்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கருமுட்டை உருவாதல், மாதவிடாய் போன்ற செயல்பாடுகளில் முக்கயி பங்காற்றுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு வெகுவாக குறைவதால் மேற்கண்ட செயல்கள் நிற்கத்தொடங்குகின்றன. இதனையே மெனோபாஸ் காலம் என்கிறோம்.

இதன் மூலம் பெண்களுக்கு முடி உதிர்வு, உடல் எடை அதிகரித்தல், ரத்த சோகை, மூட்டுவலி, தூக்கமின்மை, இதய நோய்கள், எலும்புகள் அடர்த்தி குறைவது, சருமப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

உணவுகளில் கவனம்

கால்சியம் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் தேய்வதையும் உடைவதையும் தடுக்கலாம்.

கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள், எண்ணெணில் பொரித்த பதார்த்தங்களை தவிர்த்து நார்ச்சத்து புரதங்கள் நிறைந்த உணவுகள், பயிறு வகைகள் போன்றவற்றை உண்பது நன்மை தரும்.

கீரை வகைகள், பழங்கள் உடல் சூட்டை தணிக்கும். இளநீர், நுங்கு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துகொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது முக்கியமானது.

மனநலனும் முக்கியம்

மெனோபாஸ் காலத்தில் எரிச்சல்இ கோபம், கவலை போன்ற எதிர்மறை உணர்புகள் வெளிப்படுவது இயல்பானது. இவற்றில் இருந்து விடுபடுவதற்கு எளிய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.

பிடித்தமான செயல்களில் கவனம் செலுத்துவது, மனநல ஆலோசனைகள் பெறுவதும் முக்கியமானது. வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதும் அவசியமானது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!