நடிகை ரெங்கம்மாள் பாட்டியின் தற்போதைய பரிதாப நிலை.!

பல படங்களில் முக்கிய காட்சிகளில் இடம் பெற்ற பழம்பெரும் நடிகை ரெங்கம்மாள் பாட்டி வறுமையில் தவிப்பதால் நடிகர் சங்கம் உதவ கோரிக்கை வைத்துள்ளார்.

வடிவேலு நடித்த கி.மு. என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா என்ற காமெடி இடம் பெற்றிருக்கும். அந்த காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த காமெடி காட்சியில் வடிவேலுவை நாயிடம் கடிவாங்க வைக்கும் பாட்டியின் பெயர் ரெங்கம்மாள். இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் ஆகும். சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார். இவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அந்த காலகட்டத்தில் இருந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் குண சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் அடைந்தவர்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இவர் குணச்சித்திர நடிப்பினை தான்டி காமெடியில் மிகவும் பிரபலமடைந்தவர். வடிவேலுவுடன் இவர் நடித்த ஏராளமான படங்கள் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தாலும் போறது தான் போற அந்த நாயை சூன்னு சொல்லிட்டு போ, காஞ்சனா படத்தில் லாரன்ஸ் உடன் நடித்த காட்சிகள் மக்கள் மனதில் இடம் பிடித்த நீங்கா காட்சிகளாகும்.

இதுபோன்ற தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த ரெங்கம்மாள் பாட்டியின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பட வாய்ப்புகள் கிடைக்காததாலும், நோய் வாய்பட்டு இருப்பதாலும் தான் வசிப்பதற்கு ஒரு வீடு கூட இல்லாமல், ஒரு சிமெண்ட் சீட் வைத்து மறைக்கப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் வருமானம் இல்லாதததால் வறுமையின் பிடியில் சிக்கி ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமல் அவர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து ரெங்கம்மாள் பாட்டியின் மகன் ராஜகோபால் கூறுகையில், எனது தாயுடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவந்தோம். சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வறுமையின் காரணமாகச் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் எனது தாய் ரெங்கம்மாள் இங்கேயே வசிக்க முடிவு செய்தார். தற்போது எனது தாயை அவரது சகோதரரி தான் உணவு கொடுத்து கவனித்து வருகிறார். எனது தாய்க்கும், சினிமா உலகில் இதுபோன்று வறுமையில் வாடும் சக நடிகர்களுக்கும் உதவ நடிகர் சங்கம் முன்வர வேண்டும் என்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!