உக்கிரமான போருக்கு நடுவே லவ் ப்ரபோஸ் செய்த உக்ரைன் ராணுவ வீரர்.!

ரஷ்யா – உக்ரைன் போர் உக்கிரமாக நடந்து வரும் சூழலில், உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் ஒருவர், தனது பெண் தோழியிடம் வினோதமான முறையில் லவ் பிரபாஸ் செய்த அழகான காட்சி ஒன்று , ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், சாலை தடுப்பு பகுதியில் தன்னுடைய பெண் தோழியிடம் தனது லவ் ப்ரபோஸ் செய்து அசத்தி இருக்கிறார். கடும் போருக்கு நடுவே, ராணுவ வீரரின் இந்த செயலை கண்டு, ஆச்சரியத்தில் திக்குமுக்காடி போனார் அந்த காதலி.


குஷியில் கூச்சலிட்ட ராணுவ வீரரின் காதலி, மோதிரத்தை பற்றிக் கொண்டு, தன் அருகே நின்றுக் கொண்டிருந்த பெற்றோரை பார்த்தார்.

காண்பதற்கு அழகாக இருந்த இந்த காணொளி இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், குழுவாக சில ராணுவ வீரர்கள் சோதனை சாவடி போன்ற ஒரு இடத்தில், ஒரு குடும்பத்தினரை காரை விட்டு வெளியே வர சொல்லி சோதனை செய்துக் கொண்டிருந்தனர்.

அக்குடும்பத்தினர் பதற்றத்தில் இருக்க. திடீரென சோதனை செய்து கொண்டிருந்த ஒரு ராணுவ வீரர், ஒரு பெண்ணின் பின்னே மோதிரத்தை கையில் ஏந்தியவாறு மண்டியிட்டு நிற்கிறார். மற்றொரு வீரர் இந்த காட்சியை வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

என்ன நடக்கிறது என்று அறியாத அந்த பெண், திடீரென திரும்பி பார்க்க, ராணுவ வீரர் லவ் ப்ரபோஸ் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து சந்தோஷத்தில் கூச்சலிடுகிறார்.

இந்த மொத்த சோதனை நடவடிக்கையும் இந்த லவ் ப்ரபோஸலுக்காக நடத்திய நாடகம் போல. மோதிரத்தை சம்மதத்துடன் அந்த காதலி பெற்றுக் கொள்ள. இருவரும் காதலுடன் முத்தம் பரிமாறிக் கொள்கின்றனர். கூடி இருந்த குடும்பத்தார் மற்றும் ராணுவ நண்பர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்து புத்தம் புது காதல் ஜோடியை வாழ்த்தி மகிழ்ந்தனர்.-source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!