பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்த உக்ரேனிய வீரர்!

கெர்சன் பிராந்தியத்தில் ரஷிய முன்னேற்றத்தைதடுக்க பாலத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்த உக்ரேனிய ராணுவ வீரர்.

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர வைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

கிரிமியாவிலிருந்து ரஷியப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷிய டாங்கிகளின் வரிசையைத் தடுக்க துணிச்சலாக செய்லபட்டு வீர மரணம் அடைந்து உள்ளார். விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் .

ஜெனரல் ஸ்டாப் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரஷியாவை தடுப்பதற்கான ஒரே வழி பாலத்தை தகர்ப்பதுதான் என்று பட்டாலியன் முடிவு செய்தது.

ஸ்காகுன் வோலோடிமிரோவிச் தப்பிக்க நேரமில்லை. அவர் தனது தோழர்களிடம் தன்னை தானே வெடிக்க வைக்கப் போவதாகக் கூறினார்.பின்னர் அவர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது.

ரஷிய ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை உக்ரைனின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் பாலத்தின் அருகே ரஷிய ராணுவ வீர்ரகளின் மரணத்தை உக்ரைனின் ஆயுதப்படைகள் உறுதிசெய்தன.

ஆயுதப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், வோலோடிமிரோவிச் பாலத்தில் வெடிபொருட்களை வைக்க முன்வந்த பிறகு அதை வெடிக்கச் செய்ய முடிவு செய்துள்ளார்.”பாலம் துண்டானது. ஆனால் அவர் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை,”” என்று அவர்கள் விளக்கினர்.

அவரது முயற்சிகள் மற்றும் உக்ரேனிய ஆயுதப்படைகளின் முயற்சிகள் ரஷியர்களை பிந்தங்க செய்து உள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.ரஷிய துருப்புக்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட ‘அதிக எதிர்ப்பை’ சந்திக்கின்றன என கூறினார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!