பூதலூர் பகுதியில் சந்திர கிரகணத்தின் போது தாம்பூல தட்டில் நிகழ்ந்த அதிசய காட்சி…!


தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் சந்திர கிரகணத்தின் போது தெருவில் ஒரு தாம்பூல தட்டை வைத்து அதன்மேல் உலக்கையை வைத்தனர். அந்த உலக்கை ஆடாமல், அசையாமல் அப்படியே நின்ற அதிசய சம்பவம் நடந்தது.

சந்திர கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக் கூடாது, கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தை பார்க்க கூடாது, கோவில்களில் நடை திறந்திருக்க கூடாது என்பது ஐதீகம்.

சந்திர கிரகணத்தின்போது சில ஆபூர்வ சக்திகள் நடைபெறுவது வழக்கம். கடலில் கொந்தளிப்பு, மற்றும் நில பகுதிகளிலும் அதிசய சம்பவங்கள் நடைபெறும்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் சந்திர கிரகணத்தின் போது தெருவில் ஒரு தாம்பூல தட்டை வைத்து அதன்மேல் உலக்கையை வைத்தனர். அந்த உலக்கை ஆடாமல், அசையாமல் அப்படியே நின்ற அதிசய சம்பவம் நடந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-


பூதலூர் ஒன்றியம் வீரப்புடையான்பட்டி உடையார் தெருவை வசிக்கும் மக்கள் சந்திர கிரகணத்தின் போது வீடுகளின் முன்பு கோலமிட்டு ஒரு தாம்பூல தட்டில் உலக்கையை செங்குத்தாக நிற்க வைத்தனர்.

கிரகணம் பிடிக்கும் போது மட்டும் தான் உலக்கை செங்குத்தாக ஆடாமல் அசையாமல் நிற்கும் என்றும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். இதே போல் சில வீடுகளின் முன்பும் தாம்பூல தட்டின் மீது உலக்கை நிறுத்தப்பட்டிருந்தது.

கோவில்பத்து சிவன் கோவில்தெருவில் ஒரேஒரு வீட்டின் முன்பு உலக்கை நிறுத்தப்பட்டிருந்தது. சந்திர கிரகணம் முடிந்த பிறகும் கூட உலக்கை அப்படியே நின்று கொண்டிருந்தது.

இந்த அதிசய காட்சியை கண்ட கிராம மக்கள் உலக்கையையும், முழு சந்திரனையும் வணங்கினர். அதன்பின்னர் அவர்கள் உலக்கையை எடுத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சந்திர கிரகணத்தின் போது வீட்டின் முன் வைத்த உலக்கையால் தென்னை மரத்தில் குத்தினால் அந்த மரம் அதிகமாக காய்க்கும். இவ்வாறு அவர் கூறினார். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!