விஜய் டிவி புகழின் காதலி இவரா..? வாழ்த்து சொன்ன சிவாங்கி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். புகழ், சிவாங்கி இவர்களின் அண்ணன், தங்கை காம்போ ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் நடிக்க புகழுக்கு வாய்ப்பு கிடைத்தது. அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் புகழ் கைகளை கட்டிக்கொண்டு அஜித்தின் பின்னால் நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளியாகியிருந்தது.

இந்நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, பவித்ரா என பல நடிகைகளுடன் புகழ் பண்ணும் சேட்டைகள் வைரலாகும். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் புகழ் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். பவித்ராவுடன் நெருங்கி பழகி வந்தார் புகழ் ஆனால் அவர் ஜோடி இல்லை என்பதை உறுதி செய்து விட்டார். இன்று புகழுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு லவ் யு பாட்னர், ஐ லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் புகழின் வருங்கால மனைவி தான் இவரா என நினைத்து வருகிறார்கள். ஆனால் சிவாங்கி ஹாப்பி பர்த்டே அக்கா என பதிவிட்டு இருக்கிறார். ஆனால் புகழின் ரசிகர்கள் அக்கா இல்லை அண்ணி என கலாய்த்து வருகிறார்கள்.

அன்மையில் புகழ் பைக்கில் போகும்போது பின்னால் ஒரு பெண் கை வைப்பது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது. அந்தப் பெண் பென்ஸ் ரியா தான். மைனா நந்தினி கணவர் யோகி புகழின் காதலி ரியா என்பதை உறுதி செய்யும் வகையில் கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் புகழ் இன்னும் கூறவில்லை. ஆனால் இவர்களுக்கு எப்போது திருமணம் என்பதை விரைவில் புகழ் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.- source: cinemapettai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!