வெளியில் போகும் போது ஆபத்து வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.


மஹா மிருத்யுஞ்சய மந்திரம் என்பது சிவ மந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒரு மந்திரம் ஆகும். இம்மந்திரம் முக்கண் உடைய சிவபெருமானிடம் நாம் சாகாமையை வரம் கேட்பதாக அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவனுக்கு உரிய மந்திரங்களில் இந்த மஹா மிருத்யுஞ்சய மந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்!!!!

உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத்!!!

மந்திரத்தின் பொருள்: முக்கண்களைக் கொண்ட ஈசனே! எல்லா வளமும், நலமும், ஊட்டமும் பெருகும்படி செய்யும் உன்னை, யாகம் செய்து பூஜிக்கிறேன்! வெள்ளரிப்பழம் போல இறப்பின் பிடியிலிருந்து விடுதலை செய்து சாகாமையை அருள்க.

மந்திரத்தின் விளக்கம்: எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு ஈசனுக்கு இருக்கிறது என்றால் அது முக்கண்கள் ஆகும். அழித்தல் தொழிலை செய்யும் ஈசனிடம் இறவாமையை அருளும் சக்தி உண்டு என்பதற்கு இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் கண்ணால் யாவற்றையும் அழிக்கும் திறன் படைத்தவருக்கு எமனையும் அழிக்கும் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!