சாய்னா நெய்வாலுக்கு ஆபாச பதிவு…. நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சித்தார்த்தின் டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். இவருடைய பதிவுகளுக்கு பல விமர்சனங்கள் எழுது வரும். இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சாய்னா நேவால், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கிறேன் என பதிவு செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த் பதிவு பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சித்தார்த்தின் இந்த பதிவுக்கு தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. விளையாட்டு வீராங்கணை சாய்னா நேவாலுக்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில், பெண்களை அவமானபடுத்தும் வகையில் பதிவு செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!