மாரடைப்பும்… 50 வயதை கடந்த பெண்களும்.!

அதிக உடல் பருமன், ஆரோக்கியமின்மை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பல விஷயங்கள் மாதவிடாய் விரைவாக நின்றுவிட காரணமாக இருக்கின்றன.


50 வயதுக்கு முன்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து விடும் பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடையும்போது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

‘‘மாதவிடாய் முற்றுபெற்றிருக்கும் 60 வயது பெண்களுடன் ஒப்பிடும்போது 40 வயதிலேயே மாதவிடாய் காலத்தை நிறைவு செய்துவிடும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் 40 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதிக உடல் பருமன், ஆரோக்கியமின்மை, ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பல விஷயங்கள் மாதவிடாய் விரைவாக நின்றுவிட காரணமாக இருக்கின்றன’’ என்கிறார், பேராசிரியர் கீதா மிஸ்ரா.

இந்த ஆய்வுக்காக உலகம் முழுவதும் 3 லட்சம் பெண்களின் மருத்துவ அறிக்கைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்கூட்டியே மாதவிடாய் நிற்பதற்கும், இதயநோய் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக யூகிக்கப்பட்டது. தற்போதைய ஆய்வு இதயநோய்க்கான அபாயம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!