6வது குழந்தைக்கு தந்தையான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் – கேரி தம்பதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குழந்தை பிறந்தது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் மூன்றாவதாக 33 வயதான கேரியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

57 வயதான போரிஸ் ஜான்சனுக்கு இது ஆறாவது குழந்தையாகும். முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின்-ஓவனுக்கு குழந்தைகள் இல்லை. போரிஸ் ஜான்சன் மெரீனா வீலர் என்ற வக்கீலை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!