முருகப்பெருமானை விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்!

தினந்தோறும் முருகப்பெருமானை பயபக்தியுடன் வழிபட்டு வருபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் வாழ்வில் கிடைக்கப் பெறுவார்கள் என்பது உறுதி.

முருகன் வழிபாடு தமிழர்களின் கடவுளாக பாவிக்கப்படுவர் முருகப்பெருமான். அனைவரும் மிக எளிமையாக வழிபடக் கூடிய ஒரு தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். பல சித்தர் பெருமக்களுக்கு முதலில் காட்சி தந்த தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். முருகப்பெருமான் உருவமே சரவணபவ எனப்படும் தமிழ் மந்திர எழுத்துக்களின் முழு வடிவமாக இருக்கிறது.

முருகன் தமிழகமெங்கும் பல்வேறு நிலைகளில் கோவில் கொண்டிருக்கிறார் என்றாலும் முருகனுக்குரிய சிறந்த தலங்களாக ஆறுபடை வீடுகள் எனப்படும் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, பழனி ஆகிய ஆறு முருகன் கோயில்கள் பக்தர்கள் அனைவராலும் சென்று வழிபடக்கூடிய சிறப்பு பெற்ற முருகன் தலங்களாக இருக்கின்றன. தினந்தோறும் முருகனை வழிபட்டு வருபவர்கள் அவர்கள் விரும்பிய அனைத்தும் வாழ்வில் கிடைக்கப் பெறுவார்கள் என்பது உறுதி.

முருகப்பெருமானின் முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!