டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா!

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில்
ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.

2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!