மதுரையில் ஜெ. அறிவித்த தமிழன்னை சிலைக்கு என்னாச்சு? – தமிழ் ஆர்வலர்கள் வருத்தம்…!


மதுரையில் தமிழ் அன்னைக்கு சிலை வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைக்கு நிகராக ரூ.100 கோடி செலவில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு 110 விதியின் கீழ் அறிவித்தார்.


தமிழர்களின் கலை திறனை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அந்த சிலை அமையும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான வேலைப்பாடுகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதனால், தமிழ் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ் மற்றும் இலக்கியத்தை வளர்த்த மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். – Source: webdunia.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!