டுவிட்டர் மூலம் விராட் கோலி மகளுக்கு மிரட்டல்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 24-ம் தேதி நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த டெல்லி பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில், விராட் கோலி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த விசாரணையை டெல்லி மகளிர் ஆணையம் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பிய மகளிர் ஆணையம், மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம், எப்ஐஆர் நகல், கைது செய்யப்பட்ட விவரம் தொடர்பாக 8-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.

இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறுகையில், டுவிட்டர் மூலம் 9 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது அவமானத்திற்கு உரியது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களை அளிக்கும்படி போலீசாரிடம் தெரிவித்தோம் என்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!