பிள்ளையாரை வழிபடும் போது மறக்கக்கூடாதவை !

விநாயகரை நாம் முழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம். எப்போது இறைவழிபாட்டை தொடங்கினாலும் விநாயகருக்கு முதல் மரியாதையை நாம் அளிக்க வேண்டும்.

சிதம்பரம் நகரின் தெற்குத் தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பால விநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் இருந்த போது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு அருளும் விநாயகர் இவர்.

சித்தி புத்தி விநாயகர்

விநாயகர் எப்போதும்பிரம்மச்சாரியாக விளங்குபவர். தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள். தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர். அந்த பண்புகளையே தன் இரு மனைவியராககொண்டுசித்தி புத்தி விநாயகராக வீற்றிருக்கின்றார்.

சகோதர ஒற்றுமை உண்டாகும்

சிறு வயதாக இருக்கும் போது தனது சகோதரன்,சகோதரி மீது இருக்கும் பாசம்,பெரியவர்களான பிறகுமாறிவிடுகிறது. நாரதர் கொடுத்தபழத்திற்காக, உலகைச்சுற்றி வரக் கூறிய போது, பெற்றோரை சுற்றி வந்து அவர்கள் தான் உலகம் என்பதை உணர்த்தியவர் விநாயகர். இவரேசகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதரவிநாயகராகவும் அருள்பாலிக்கிறார். தன் தம்பி முருகன் வள்ளி திருமணத்திற்கு மிகவும் உதவினார். இந்த ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிந்திருக்கும் சகோதரர்கள் விநாயகரைவணங்கினால் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

இனிமையான குரல் வளம் பெற….

நன்றாக பாடுவதற்கு, அதுவும் சங்கீதம் பாட இனிமையான குரல் வேண்டும். இதற்கு தினமும் பாடி பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்தாலும் பலன் வருவதற்கு இறைவனின் அருள் வேண்டும் அல்லவா. விதைப்பதை அறுவடை செய்ய பகவான் துணை இருந்தால்தான் அறுவடை செய்ய முடியும் என்பார்கள்.
அதுபோலதான். இறைவனை வணங்கி இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குரல் இனிமை பெறும். தியாகராஜ சுவாமிகளுக்கு செய்யும் தேன் அபிஷேகத்தை பிரசாதமாக சாப்பிட்டாலும், சுவாமிகளின் அருளாசியால் குரல் இனிமையாக இருக்கும்.

செல்வம் கல்வி மேம்படும்

விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டா கும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டா கும். சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனைப்பலன்

ஆடை சார்த்தினால் மானம் காக்கப்படும். செம்பருத்தி பூமாலையிட்டால் இட மாற்றம் நல்லபடி அமையும். வீட்டில் படம் வைத்து 21 வெள்ளிக்கிழமை அரைத்த சந்தனம் குங்குமம் இட்டு, அவ்வையார் பாடிய விநாயகர் அகவலை 3 முறை ஓதிட திருமணம் கைகூடும். விநாயகர் ஆவணியில் சதுர்த்தியில் அவதரித்த நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். இவர் கன்னி ராசிக்கு உரியவர். கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும் கன்னியில் புதனும் உச்சம் பெற்றுள்ளனர். சூரியன் சொந்த வீடான சிம்மத்தில் உள்ளார். செவ்வாய் சூரிய விருச்சிகமே இவரது லக்னம். உத்தி ராடத்திற்கு இவர் அதிதேவதையாகத் திகழ்கிறார். இவரது ஜாதகத்தை வழிபட்டால் இந்த நட்சத்திரத்தினர்பலன் பெறுவர் என்பது ஐதீகம்.

21 நைவேத்தியங்கள்

சோறு, நெய் மிளகுப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு பொங்கல், பால்பொங்கல், பால்சாதம், அக்கார வடிசில், சம்பா சாதம், தயிர்சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தானியப்பொடி சாதம், மருந்துக்குழம்பு சாதம், சாம்பார் சாதம், நாரத்தங்காய் சாதம், மாங்காய்சாதம், துவையல் சாதம், அரிசி உப்புமா, ரவா உப்புமா, மாவுக்கனி ஆகிய 21 வகை நைவேத்தியங்களை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!