கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ் – குவியும் பாராட்டு!

ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்க முயன்று தவறி விழுந்த கர்ப்பிணி பெண்னை காப்பாற்றிய ரெயில்வே போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்யாண் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நேற்று அந்த ரெயில் நிலையத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த ஒரு ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் அவசரமாக கீழே இறங்கினார்.

அப்போது அவர் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் உள்ள இடைவெளியில் நிலைதடுமாறி விழுந்தார். அந்த சமயம் அங்கு வந்த ரெயில்வே கான்ஸ்டபிள் விரைந்து சென்று கர்ப்பிணிப் பெண்ணை கீழே விழாமல் காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், மும்பை மத்திய ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர், தனது டுவிட்டரில், இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, ஓடும் ரெயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பிளாட்பாரத்தில் விழ இருந்த கர்ப்பிணி பெண்ணை சட்டென காப்பாற்றிய ரெயில்வே போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!