திருடனுங்க இல்லாத ஜாதி இருக்கா..? சூர்யாவின் ” ஜெய்பீம்” பட டீசர் ரிலீஸ்!

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் சூர்யா நடிப்பில் டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!