இனி வாட்ஸ்அப் இப்படித்தான் இயங்குமா..?

வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுக்க இரவு நேரம் வாட்ஸ்அப் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி இரவு 11.30 மணி முதல் காலை 6.00 மணி வரை முடக்கப்படுவதாக வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த தகவலை மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்யவில்லை எனில், பயனர்களின் அக்கவுண்ட்கள் டி-ஆக்டிவேட் செய்யப்படும். டி-ஆக்டிவேட் ஆன வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ இயக்க மாதம் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தகவலை சரியாக மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்வோருக்கு புதிதாக பாதுகாப்பான அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் சார்பிலும் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ளது போன்று வாட்ஸ்அப் இரவு நேரங்களில் முடக்கப்படாது என்பது உறுதியாகிவிட்டது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!