பித்ருக்களுக்கு மகாளய அமாவாசையன்று நோன்பு இருப்பது எப்படி?

‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக்களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.


மகாளய அமாவாசையன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும்.

மேலும் அன்றைய தினத்தில் இறை அடியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை தரும். தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் கடற்கரை, கோடியக்கரை, பவானி, ஆடுதுறை, குமரி துறை, திருதலங்காடு, திலதர்ப்பனபுரி, திருவையாறு, மன்னார்குடி, வேதாரண்யம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

உடல்நிலை சரி இல்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்தில் வைத்து கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும். இந்த நாட்களில் மாட்டு தொழுவத்தில் பித்ருபூஜை செய்தால் வம்சா வழி தோஷம் நீங்கும், ஆயுள்பலம் கூடும். முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாலும் பலன் உண்டு.

பித்ருக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் போது அவர்கள் வழங்கும் ஆசிகள் திருமணத் தடை, குழந்தை இல்லா கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மனஅமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். தர்ப்பணத்துக்கு பின்னரே வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும். நமது பித்ருக்களை திதி நாளில் திருப்திப்படுத்தாத காரணத்தினால் நமக்கு துன்பங்கள் வருகின்றன. பித்ருக்களை சாந்தப் படுத்த திலஹோமம் செய்வது அவசியம்.

‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக்களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!