அமெரிக்க மாற்றுத் திறனாளி கின்னஸ் சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், சாதனைக்கு வயது மட்டுமின்றி உடலும் ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீயோன் கிளார்க். இவர் 4.78 செகண்டில் 20 மீட்டர் வரை தனது கைகளால் விரைவாக நடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இரு கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கையால் தனது உடலை வளர்த்துள்ளார். உடலின் கீழ் பாகம் இல்லாமல் மேல் பாகங்களை மட்டும் வைத்து இந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.

இவர் ஒரு மல்யுத்த வீரர் மற்றும் சக்கர நாற்காலி பந்தய வீரர். 2024 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தய விளையாட்டுகள் இரண்டிலும் பங்கேற்கும் முதல் அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதே இவரது குறிக்கோள். இவரது வீடியோ இதுவரை யூடியூபில் 2,354,879 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராமில் சீயோன் கிளார்க்கின் சாதனையை பதிவிட்டுள்ளனர். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!