சிண்ட்ரெல்லா திரைவிமர்சனம்!

நடிகர் நடிகர் இல்லை
நடிகை ராய் லட்சுமி
இயக்குனர் வினோ வெங்கடேஷ்
இசை அஸ்வமித்ரா
ஓளிப்பதிவு ரம்மி


சென்னையில் சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ராய் லட்சுமி, பறவைகளின் சத்தத்தை பதிவு செய்ய நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதிக்கு சென்று காட்டு பங்களாவில் தங்குகிறார். அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதை ராய்லட்சுமி உணருகிறார்.

அதேசமயம் அந்த ஊரில் இரண்டு மர்மக் கொலைகள் நடக்கிறது. இதற்கு காரணம் ராய் லட்சுமிதான் என்று போலீசார் அவரை கைது செய்கின்றனர். இறுதியில் அந்தக் கொலைகளை செய்தது யார் ? எதற்காக செய்தார்கள்? அந்த பங்களாவில் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. மாடர்ன் பெண்ணாகவும், வெகுளித்தனமான பெண்ணாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். வேலை பெண்ணாக பணிவிடை செய்வது, ஆடைக்காக பணம் சேர்ப்பது, நடனம் ஆடுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார்.

மற்றொரு நாயகியாக வரும் சாக்ஷி அகர்வால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காதல், வெறுப்பு, கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். பேய்க்கு பயப்படும் போது பரிதாபத்தையும், ராய் லட்சுமியை திட்டும்போது கோபத்தையும் ஏற்படுத்துகிறார். வில்லி கதாபாத்திரம் சாக்ஷி அகர்வாலுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!