புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது சிஎஸ்கே!

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை அணி 9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் 9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!