உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய நடிகை: திடீர் தீவிபத்து – அடுத்து நடந்தது என்ன?

அமெரிக்காவில் பிரபல டிவி நடிகையான நிக்கோல் ரிச்சியின் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க டிவி நடிகையான நிக்கோல் ரிச்சி சமீபத்தில் தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நிக்கோல் மெழுகுவர்த்தியை ஊதிக் கொண்டிருந்தபோது, ​​அவரது தலைமுடி எரியும் மெழுகுவர்த்தி ஒன்றில் தீப்பிடித்தது.
பின்னணியில் உள்ள ஆரவாரங்கள் அவரது கூந்தல் தீப்பற்றி எரிவதைக் கண்டவுடன் அலறலாக மாறியது. அதன்பின் தீ அணைக்கப்பட்டது.

இந்த வீடியோவை 2.9 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் பார்த்துள்ளனர். அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். எங்களால் மறக்க முடியாத தருணம் என அவரது ரசிகர்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!