வடிவேலுவின் மகன் நடிக்க போகிறாரா??? வெளியான முக்கிய தகவல்.!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி கிங் வடிவேலு, தற்போது படங்களில் நடிப்பதில்லை என்றாலும், மீம்ஸ், ட்ரோல் வீடியோக்கள் மூலமும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு தான் இருக்கிறார். இவரது பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரிக்கு என உலகம் முழுவது ரசிகர் கூட்டமே உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு காலத்தில் நேரமே இல்லாமல் தொடர்ந்து பிசியாக நடித்து கொண்டிருந்த அவர், 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக நடிக்கவில்லை.. அப்படி நடித்திருந்தாலும், அவரின் படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.

இதையடுத்து சமீபத்தில், திரையுலகில் அவருக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் அவர் தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளதாக அவரே தெரிவித்தார்.

இவரது மகன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் அதிக அளவில் பகிரபப்ட்டு வருகிறது. அந்த பேட்டியில், அவர் பல சுரவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார். தனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், ஆனால் அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார். சுப்ரமணிக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள்(Twins) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.- source: 1news * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!