வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?

மகாலட்சுமியை அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள்.


மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருதி இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள்.

அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள். என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.

அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?

வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!