அந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் அதற்கு அர்த்தமாம்…!


காதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஒரு வழி தான் முத்தம். காதலின் முதல் மொழி முத்தம் என்று சொல்லலாம். ஏனெனில் இது எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாக உள்ளது. காதலர்கள் முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்தும். இங்கு எந்த இடத்தில் முத்தம் கொடுத்தால், என்ன அர்த்தம் என்பதைப் பார்க்கலாம்.!


மூக்கில் முத்தம்.!
மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம்.


நெற்றியில் முத்தம்.!
நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.


கண்களில் முத்தம்.!
கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.


கழுத்தில் முத்தம்.!
அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.


கண்களை மூடி கொடுப்பது.!
காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.


கண்களை திறந்து முத்தம்.!
முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பதுபோல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷப்பட வைப்பதுடன், உங்களைஉணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம். இதை பெரும்பாலும் புதியதம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.


உதட்டில் முத்தம்.!
காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில்முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்றுஅர்த்தமாம். – Source: tamil.samayam.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!