தினமும் 10 நிமிடம் ‘ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்’ என மனதார சொல்லுங்கள்.!

உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக சீரடி சாய்பாபாவின் மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். அதை காணலாம்….

தினமும் காலையில் இறைவழிபாடு செய்யும் போது ஒரு 10 நிமிடம் ஒதுக்கி “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்” மூல மந்திரத்தை மனதார சொல்லுங்கள். உங்களது அன்பையும், பக்தியையும் பாபா ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக இந்த மூல மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். அதை காணலாம்….

  • யார் எனது திரு நாமத்தை தினமும் இடைவிடாமல் ஜெபிக்கிறாரோ அவர் நிச்சயம் முக்திப்பேறு அடைவார்.
  • ஆடம்பரங்களையும் வெளித் தோற்றங்களையும் கண்டு நான் ஏமாறுவதே இல்லை. என் நாமத்தை மனதுக்குள் ஆத்மார்த்தமாக உச்சரித்துக்கொண்டே இருப்பவர்தான் எனது உண்மையான பக்தனாக இருக்க முடியும். அத்தகையவர்களின் உள்ளங்களில்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
  • யார் என்னுடய நாமத்தை நம்பிக்கையோடு சொல்லி வருகிறோரோ அவருக்கு நான் விரும்பியதை எல்லாம் அளிக்கிறேன். இதன் காரணமாக அவருக்கு என் மேல் உண்டான பக்தி பல்கிப் பெருகும்.
  • சாய் சாய் என்ற திருநாமம் கலியுகத்தின் மாயையைக்கலைக்கும். அதர்மங்களை எரிக்கும். பேச்சாலும், செயல்களாலும் செய்யப்படும் பாவங்கள் என் முன்பு சொல்லப்படும் சாய் சாய் என்ற மந்திரத்தால் பறந்தோடி விடும்.
  • உங்களுடைய புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு எப்போதும் சாய் சாய் என்று என்னையே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வைத்துக் கொண்டால் இந்த உலகின் தேவையற்ற பந்தபாசப்பிடிகளில் இருந்து நீங்கள் விடு விக்கப்படுவீர்கள்.
  • யாருடைய பாவங்கள் எல்லாம் மறக்கப் படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என் திருநாமத்தை சொல்லி வணங்கும் அரிய பாக்கியத்தை பெறுவார்கள்.
  • நீ எந்த காரியத்தை செய்தாலும் அல்லது செய்து கொண்டு இருந்தாலும் எதை செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி என் நாமத்தை சொல்லிக் கொண்டே செய். என் நாமம் எந்த அளவுக்கு உச்சரிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அந்த வேலையை நான் மிக எளிதாக வெற்றி அடையும்படி செய்வேன்.
  • நீங்கள் என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் நான் உங்களை நோக்கி பல அடிகள் எடுத்து வைப்பேன். உங் கள் மனதில் தோன்றும் ஆழமான எண்ணங்களையும் நான் அறிவேன். ஒவ்வொரு நிமிடமும் நான் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். என் நாமத்தை உச்சரித்தால் அருகில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொண்டே இருப்பேன்.

  • ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற என் நாமத்தை உச்சரிப்பதால் உனக்கு வேறு எந்தவித சிந்தனையும் தோன்றாது. வேறு எந்த துன்பங்களும் வராது. என் நாமத்தை மனதுக்குள் ஒருமித்த உணர்வுடன் சொல்லச் சொல்ல உண்மைகள் தானாக வெளிவரும்.
  • என் பக்தன் என்னிடம் மட்டுமின்றி எல்லா ஜீவன்களிலும் நான் இருப்பதாக உணரவேண்டும். அப்படி உணர்ந்து என் நாமத்தை உச்சரிக்கும்போது எல்லாவற்றிலும் என்னை குருவாக நீ காண முடியும். நாளடைவில் அவன் நானாக ஆகி விடுவான்.
  • பக்தா உன் எண்ணங்கள், குறிக்கோள் கள் அனைத்திலும் என் நாமத்தை சேர்த்துக் கொள். உனக்கு மிக உயரிய நிலை விரைவில் கிடைக்கும்.
  • ஒருவன் முழு மனதுடன் என் நாமத்தை உச்சரித்தால் அவனது உடல், ஆத்மா இரண்டை பற்றியும் எந்தவித கவலையும் கொள்ள வேண்டியது இல்லை. என்னைப் பற்றிய பேச்சுகளையே கேட்டு என்னையே நினைத்து என் நாமத்தையே அவன் உச்சரித்தால் என்னோடு கலந்து விடுவான்.
  • இடைவிடாமல் என் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களது லட்சியத்தை தங்கு தடையின்றி மிக எளிதாக சென்று அடைவார்கள்.
  • நான் மிகப்பெரிய உபசாரங்களை எனக்கு செய்யுங்கள் என்று என் பக்தர்களிடம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. ஆடம்பரமான வழிபாடுகள் எனக்கு வேண்டாம். ஆத்மார்த்தமாக உள்ளம் ததும்ப சாய் சாய் என்று சொன்னாலே போதும்.
  • ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கி விட்டு எனது நாமத்தை நினைத்துக் கொண்டே இருந்தால் நான் அவனு டைய எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.
  • இப்படி மூல மந்திரத்தின் மகிமையை சாய் பாபா தனது பக்தர்களுக்கு பல தடவை உணர்த்தி உள்ளார். அதனால்தான் பாபா பக்தர்கள் இடையே சாய்ராம் சாய்ராம் என்று சொல்வது வழக்கத்துக்கு வந்தது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!