பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு – பாம்பு வி‌ஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து!

ஒரு வகை பாம்பின் வி‌ஷத்தில் உள்ள மூலக்கூறு மூலம் குரங்குகளுக்கு பரிசோதனை செய்ததில் குரங்கு செல்களில் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் செய்வதை தடுக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரசை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பாம்பு வி‌ஷத்தில் இருந்து கொரோனாவுக்கு எதிராக மருந்தை உருவாக்கும் பணியில் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வகை பாம்பின் வி‌ஷத்தில் உள்ள மூலக்கூறு மூலம் குரங்குகளுக்கு பரிசோதனை செய்ததில் குரங்கு செல்களில் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் செய்வதை தடுக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

பாம்பு வி‌ஷத்தின் இந்த மூலக்கூறு கொரோனா வைரசில் இருந்து மிக முக்கியமான புரதத்தை தடுக்கிறது என்று சாவ்பாலோ பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வின் ஆராய்ச்சியாளருமான ரபேல் கைடோ தெரிவித்தார்.

முதல்கட்ட ஆய்வுக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் அடுத்ததாக மூலக்கூறின் வெவ்வேறு அளவுகளின் செயல்திறனை மதிப்பீட்டு செய்கிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!