திருமணவாழ்க்கையும், நாகதோஷப் பொருத்தமும்..!

ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

  1. நாகதோஷம் ஆண்/பெண் இருவர் ஜhதகங்களில் இருந்தாலும் பொருத்தலாம். இல்லாவிட்டாலும் பொருத்தலாம்.
  2. ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது.
  3. ஆண், பெண் இருவருக்கும்; சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்கினால் சேர்க்கலாம். ஒருவருக்கு மட்டும் நீங்கினால் போதாது.
  4. ஆண் ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8. 12 வது இடங்களில ராகு அல்லது கேது சுபர் பார்வையுடன் இருக்கும்போது, பெண் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்தால் அது மத்யம பலனைக் கொடுக்கும். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை அமையும்.
  5. பெண் ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ள அதே இடத்திலேயே ஆண்; ஜாதகத்திலும் இருக்கவேண்டும் என்று ஒரு அபிப்ராயம் ஜோதிடர்களிடையே உள்ளது. அவ்வாறு அமைந்தாலும் நல்லதே. தோஷசாம்யம் ஏற்படும்.
  6. அசுவினி, மகம், மூலம், நத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்த்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோஅல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
  7. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்த்திரமாக வரும ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
  8. ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!