3 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் சகாப்வா 28 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சகாப்வா அதிரடியாக 47 ரன்கள் எடுத்தார்.

அடுத்து இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது சகாப்வாவுக்கு அளிக்கப்பட்டது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!