இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் – காபூலில் பலி எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு!

காபூல் நகரம் தலிபான்களின் வசமான பிறகு 10 நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதலில் 72 பேர் பலியாகினர். மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது.

காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 90 பேர், அமெரிக்கப் படைவீரர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!