திருமண சர்ச்சையில் சிக்கிய எம்பி-க்கு ஆண் குழந்தை பிறந்தது..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லோக்சபா எம்பியும், பிரபல பெங்காலி நடிகையுமான நஸ்ரத் ஜஹான், இவர், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் துருக்கியில் நடந்தது. கடந்த ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.

அப்போது நஸ்ரத் அளித்த பேட்டியில், “எனக்கும், நிகில் ஜெயினுக்கும் வெளிநாட்டில் திருமணம் நடந்தது. அதை இந்தியாவில் பதிவு செய்யவில்லை. தற்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகவே கருதப்படும். எனவே, அதற்கு விவாகரத்து தேவையில்லை” என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த நஸ்ரத் ஜஹானுக்கு கோல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (26ம் தேதி) ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, பிரிந்து வாழும் அவரது கணவர் நிகில் ஜெயின் கூறுகையில், “எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனினும், புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கும், குழந்தையின் தாய்க்கும் என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.- source: newstm * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!