சூடுபிடிக்கும் போதைப்பொருள் விவகாரம்- திடீரென ஆஸ்பத்திரியில் அட்மிட்டான நடிகை!

நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதியும் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். தற்போது 2 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.

இதற்கிடையில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்தது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் 2 பேருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நடிகை சஞ்சனா பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!