மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு கூடுதல் பொறுப்பு!

இலங்கையில் பிரதமா் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சரியாக செயல்படவில்லை என்ற விமா்சனத்தை எதிா்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சா் பவித்ரா வன்னியராச்சி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டாா்.

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்று ஓராண்டு ஆகும் நிலையில், அமைச்சரவையில் அதிபா் கோத்தபய ராஜபக்சே மாற்றம் செய்துள்ளார். அதன்படி 7 மந்திரிகளுக்கு புதிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார துறை மந்திரியாக இருந்த பவித்ரா வன்னியராச்சி மாற்றப்பட்டு போக்குவரத்து மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய சுகாதார துறை மந்திரியாக கெலியா ராம்புக்வெல்லா நியமிக்கப்பட்டுள்ளாா்.

கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய கடந்த 2020ம் ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து சுகாதார துறை மந்திரியாக பவித்ரா வன்னியராச்சி பதவி வகித்து வந்துள்ளார். ஆனால், நாட்டில் கொரோனா பரவலை சரியாக கையாளவில்லை என அவா் மீது விமா்சனம் எழுந்தது. இந்த சூழ்நிலையில் சுகாதார துறை பொறுப்பிலிருந்து அவா் மாற்றப்பட்டுள்ளாா்.

வெளியுறவு துறை மந்திரியாக ஜி.எல். பெரிஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கனவே அப்பொறுப்பில் இருந்த தினேஷ் குணவா்த்தன கல்வி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்னதாக பெரிஸ் வெளியுறவு மந்திரியாக கடந்த 2010-2015ம் ஆண்டுகளில் பதவி வகித்துள்ளாா்.

பிரதமா் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல், ஏற்கெனவே இளைஞா் மற்றும் விளையாட்டுமந்திரியா துறை மந்திரியாக இருக்கும் நிலையில், கூடுதலாக மேம்பாட்டு ஒருங்கிணைப்பு துறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!