ஆடிக்கு சென்ற மனைவியை அழைத்து வர பிரமாண்டமாக சீர்வரிசை கொடுத்த கணவன்!

ஆடி மாதத்தையொட்டி மனைவியை அழைக்க சென்ற கணவன் பிரமாண்டமாக சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்தவர் பலராம கிருஷ்ணா. இவரது மகள் பிரதிக்ஷா, புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியை சேர்ந்தவர் தோட்டராஜு மகன் பவன்குமார்.

பிரதிக்ஷாவுக்கும், பலராம கிருஷ்ணாவுக்கும் கொரோனா காலத்தில் திருமணம் நடந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக உறவினர்கள், நண்பர்களை அழைக்க முடியாமல் மிக எளிமையாக கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி திருமணம் நடந்தது.

இதையடுத்து ஆடிமாதம் என்பதால் பிரதிக்ஷாவை முறைப்படி தாய் வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தனர். இதனால் மகளை அழைத்து வரச்சொன்றபோது பெரிய அளவிலான சீர்வரிசை பலராமகிருஷ்ணா செய்தார்.

இதையடுத்து தற்போது ஆடிமாதம் முடிந்து மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துவர சென்ற பவன்குமார் 10 ஆயிரம் கிலோவில் 20 வகையான இனிப்புகள், வாழைத்தார்கள், 1000 கிலோ காய்கறிகள், 20 ஆடுகள், 50 பட்டு சேலைகள் மற்றும் பல்வேறு வகையான பழங்கள் ஆகியவற்றை மனைவிக்கு சீராக வழங்கி அழைத்து வந்தார்.

ஆடி மாதத்தையொட்டி மனைவியை அழைக்க சென்ற கணவன் பிரமாண்டமாக சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!