தங்கம் வென்று சாதனை படைத்த குட்டி நாடு.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மகளிர்களுக்கான ட்ரையத்தியன் போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதில், 33 வயதான பெர்முடா வீராங்கனை ஃபுளோரா டஃபி 55.36 நிமிடங்களில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். ட்ரையத்தின் போட்டி என்பது ஓட்டப் பந்தையும், சைக்கிளிங், நீச்சல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட பெர்முடா நாட்டைச் சேர்ந்த ஒரு வீராங்கனை தங்கம் வென்று, அந்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெறும் 40 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் குட்டி நாடு பெர்முடா, இதன் மக்கள்தொகை 68,000 மட்டுமே. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 வீரர்கள் மட்டும் பங்கேற்றனர், இதில் ட்ரையத்தின் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஃபுளோரா டஃபி என்ற வீராங்கனை. இதுகுறித்து அவர் கூறுகையில், முதன்முறையாக என்னுடைய கனவும், எனது நாட்டின் கனவும் நிறைவேறியுள்ளது என உருக்கமாக பேசியுள்ளார். அந்த நாட்டிற்கு இதுதான் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!