வாழ்வில் எல்லா வளமும் பெற மிதுனம் ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

மிதுன ராசிகாரர்கள் தங்களின் வாழ்நாளில் சிறப்பான பலன்களை பெறுவதற்கு என்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நமது ஜோதிட சாஸ்திரங்களில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. இந்த பன்னிரண்டு ராசிகள் அனைத்துமே நாவாகிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும். இந்த ராசிகளில் மூன்றாவதாக வரும் ராசி “மிதுனம்” எனும் ராசியாகும். மிதுன ராசிகாரர்கள் தங்களின் வாழ்நாளில் சிறப்பான பலன்களை பெறுவதற்கு என்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிக்கட்டங்களில் மூன்றாவதாக வரும் ராசி மிதுனம் ராசியாகும். இந்த மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். புதனின் ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறந்த அறிவாற்றல் மற்றும் கணித திறனும் இருக்கும். இயற்கையிலேயே பணம் சம்பந்தமான விடயங்களில் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் சொந்த திறமையால் வாழ்க்கையில் உயர்வான நிலைக்கு வருவார்கள். மிதுன ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை காணலாம்.

மிதுன ராசிக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை பெறுவதற்கு மிதுன ராசியின் நாயகனான புதன் பகவானை புதன் கிழமைகள் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு புதன் பகவானின் அம்சம் நிறைந்த பெருமாளையும் வணங்கி வர வேண்டும். வருடத்தில் ஒரு முறையாவது புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

பிறருக்கு பணத்தை திருப்பி தர வேண்டி இருப்பின் புதன், வெள்ளி கிழமைகளில் தருவதை தவிர்க்க வேண்டும். புதன் கிழமைகளில் இளம் பச்சை நிற ஆடைகளை அணிந்து வருவது உங்களுக்கு பணம் சம்பந்தமான விடயங்களில் மிகுந்த யோகங்களை உண்டாக்கும். தரமான தங்கத்தில் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு நகையை அணிந்திருப்பது நல்லது. வெள்ளியில் மரகத கல் பதித்த மோதிரத்தை வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். விலங்குகளின் தோல் கொண்டு செய்யப்பட்ட பெல்ட், பர்ஸ் போன்றவைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!