தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீ கால பைரவரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்!

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபாட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாது தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.


பைரவர் சிவனின் 64 திரு உருவத்தில் ஒருவர் ஆவார். சொர்னாகர்சன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார். பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோயிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

பைரவர்விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. பைரவர் விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

  1. தலை குனியா வாழ்க்கை.
  2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
  3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
  4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
  5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
  6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
  7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
  8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
  9. இறைவனை எளிதாக உணர்தல்.
  10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!