பெற்றோர்களே உஷார்.! மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாபம்

மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் கடலை சிக்கியதில் சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிகன்னபுரத்தை சேர்ந்த ராகேஷ் என்கிற ஆட்டோ ஓட்டுனருக்கு 6 வயதில் நிவேதிதா என்கிற மகள் இருந்துள்ளார். நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமி மிக்ஸர் சாப்பிடும் போது அதிலிருந்த கடலை மூச்சுக் குழாயில் சிக்கி மூச்சுத்திணறி துடித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து ராஜேஷ் கூறுகையில், நிவேதிதா மூச்சு விட சிரமப்பட்ட போது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.
செல்லும் வழியில் கண் திறந்து தனது தாயை பார்த்தார். பின்னர் அவளுடைய தாய் அவளிடம் சாக்கலேட் வாங்குவதாக சொன்னார். அப்போது நிவேதிதா தலையாட்டினாள். பின்னர் சிறிது நேரத்தில் அவள் கண்ணை மூடி சரிந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

குழந்தைகள், சிறுவர்களின் உணவு சாப்பிடும்பொழுது பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனுடம், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது நிவேதிதாவின் மரணம்.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!