2 முறை இந்திய ஜாம்பவான்களை கதிகலங்க வைத்த பிராவோ..!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாயாஜால பந்து வீச்சாளர் பிராவோ இந்திய அணியை இரண்டு முறை 1 ரன்னில் தோல்வியடைய வைத்துள்ளார்.


இந்திய அணி 2006-ம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒருநாள் தொடர் கொண்ட போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் ராகுல் டிராவிட்(கேப்டன்), எம் எஸ் டோனி, முகமது கைப், ஹர்பஜன் சிங், அஜித் அகார்கர், முனாப் படேல், இர்பான், பதான், ரமேஷ் பவார், சுரேஷ் ரெய்னா, ஸ்ரீ சாந்த், ஆர்பிசிங், ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், வேணுகோபால் ராவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியிலும் கடைசி பந்தில் தான் இந்திய அணி வெற்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சர்வான் 138 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் இர்பான் பதான் 3 விக்கெட்டும் அஜித் அகர்கர், ரமேஷ் பவார் 2 விக்கெட்டும் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் யுவராஜ் சிங் மட்டும் நிலைத்து ஆடி அரை சதம் அடித்தார். கடைசி ஒரு ஓவரில் இந்திய அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. கடைசி ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ வீசினார். முதல் பந்தை முனாப் படேல் சந்தித்தார். பிராவோ முதல் பந்தை யார்கர் முறையில் வீச அதனை படேல் தடுத்து ஒரு ரன் எடுத்தார். 2-வது மற்றும் 3-வது பந்தில் யுவராஜ் சிங் பவுண்டரி அடித்து அசத்தினார். கடைசி 3 பந்தில் 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ரசிகர்கள் கண்டிப்பாக இந்தியா வெற்றி அடைந்து விடும் என நம்பிக்கையோடு இருந்தனர்.

தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் லாரா பிராவோவிடம் வந்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து 4-வது பந்தை போட பிராவோ தயாரானார். ஒரு விக்கெட் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி. 2 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி என்ற நிலையில் பிராவோ 4-வது பந்தை மெதுவாக (solw ball)வீசினார். அந்த பந்தில் யுவராஜ் போல்ட் ஆனார்.

இதனால் வெஸ்ட் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட்டை இழந்த யுவராஜ் சிறிது நேரம் களத்திலேயே சோகத்துடன் உட்கார்ந்து இருந்தார். போட்டி முடிந்து அடுத்த நாள் பேட்டியில் யுவராஜ் சிங் போட்டி முடிந்த நாள் இரவில் தூக்கத்தை இழந்ததாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் பிராவோவால் இந்திய அணி 1 ரன்னில் தோல்வியடைந்த நிலையில் 10 வருடம் கழித்து இதே மாதிரி ஒரு போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார் பிராவோ. இதே மாதிரி ஒரு ரன்னில் இந்திய அணியை தோல்வி அடைய வைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டியில் களந்து கொள்ள அமெரிக்கா சென்றது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து முதல் டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

20 ஓவர் முடிவில் வெண்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லீவிஸ் 49 பந்தில் 100 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஜடேஜா பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – ரஹானே களமிறங்கினார். ரஹானே 7, விராட் கோலி 16 எடுத்து வெளியேறினார். இந்நிலையில் ரோகித் – ராகுல் ஜோடி சிறப்பாக ஆடினர். ரோகித் 28 பந்தில் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து ராகுல் – டோனி சிறப்பாக ஆடி 19 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. கடைசி ஓவரை மாயஜால பந்து வீச்சாளர் பிராவோ வீசினார்.

முதல் 5 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்படும் நிலையில் டோனி களத்தில் இருந்தார். எப்படியும் டோனி வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் ஒரு பக்கம் பந்து வீசுபவர் பிராவோ என்பதால் கொஞ்சம் பீதியாக தான் இருந்திருக்கும். அதுபடியே நடந்தது. கடைசி பந்தை மெதுவாக (slow ball)வீசி டோனியை கேட்ச் என்ற முறையில் அவுட் ஆக்கினார்.

அன்று யுவராஜ் சோகத்துடன் இருந்தது போல இந்த போட்டியில் கேஎல் ராகுல் இருந்தார். அவர் 51 பந்தில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு தான் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட்டிருக்கும்.

10 வருடத்துக்கு அப்புறம் மீண்டும் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் வீரர் 1 ரன்னில் தோல்வி அடைய வைத்திருக்கிறார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!