மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்!

கேதுவின் ஆதிக்கத்தில் வரும் மூன்றாவது நட்சத்திரம் மூலம். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்று சொல்வது உண்டு. ஆனால், ஆராய்ந்து பார்த்தால் இதில் உண்மை இல்லை. ‘ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்’ என்று சொல்வதுதான் சரி. ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் யோகத்தினைப் பெற்றிருப்பர். அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது.

ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும். இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன. தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும்.

மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்குக் காரணம். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரித்திருக்கிறது.

நட்சத்திர தோஷம் என்பது எதுவுமே கிடையாது எதுகை மோனையாக சொல்லப்பட்ட வார்த்தை மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது விசாகம் கேட்டை ஆகாது என்பதெல்லாமே

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் இதுவல்ல சொல் வழக்கு
பண்டைய நூல்களில் (புலிப்பாணி சித்தர்) ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்பது மருவி ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம் என்றாகி விட்டது. ஆனி மூலம் நட்சரத்தில் பிறந்தால் அரசு அரசு சார்ந்த துறை இவருக்கு சாதகமாக அமையும் என்பதே விளக்கமாகும். பின்மூலம் அடுத்தடுத்த மாதங்களில் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் எதிரிகள் நிர்மூலமாகி விடுவார்கள் என்பதே உண்மையான வழக்கு.

ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சந்திரன் தனுசு ராசியில் இருக்கும். அப்படி தனுசு ராசியில் இருக்கும் சந்திரனை மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் இருக்கும் குரு பார்த்தால் அந்த ஜாதகருக்கு நாடாளும் யோகம் ஏற்படும். அதேபோல் மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள் என்பதுதான் சரி.

ஶ்ரீராம பக்த அனுமன் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். சிவபெருமானின் அம்சமாகவும், மகாவிஷ்ணுவின் சேவகனாகவும் இருக்கும் அனுமனை வழிபட்ட எவரும் எந்த நிலையிலும் கைவிடப்படுவதில்லை, தோல்வியைச் சந்திப்பதில்லை என்பது நிதர்சனம்.

இந்த நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று. இது நட்சத்திர வரிசையில் 19 வது நட்சத்திரம். மூலம் நட்சத்திரம் தனுசு எனும் பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ராசியில் இடம்பெற்றிருக்கும்.

மூல நட்சத்திரம் அனைத்திற்கும் மூலமாக விளங்கக் கூடியது. மூலம் நட்சத்திரம் தனுசு எனும் 9வது வீட்டில் இருக்கும் முதல் நட்சத்திரம். இந்த 9ம் வீடு தான் பாக்கியஸ்தானம் என்கிற நல்ல யோகங்களை தரக்கூடியதாகும். மேலும் பூர்வீகச் சொத்து, தந்தை வழி மூதாதையர் நிலை என்னும் பிதுர் ஸ்தானம் என்பதைக் குறிக்கிறது. பரம்பரையின் தொடர்ச்சியையும் சொல்லக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆக பரம்பரையின் தொடர்ச்சிக்கான ஆணிவேர் எனும் மூலம் தான், அதாவது அஸ்திவாரம்தான் தனுசு மூலம் நட்சத்திரம்.

பரிசுத்தமான உன்னதமான நட்சத்திரம் மூலம்! சாஸ்திரங்களுக்கு முதன்மையானவரான குரு பகவான் வீடுதான் தனுசு ராசி. அந்த தனுசில் முதல் நட்சத்திரமாக இருப்பது தான் மூல நட்சத்திரம். இந்த மூல நட்சத்திரம் சிங்கத்தின் வால் போன்றும், மலை போன்ற யானையை அடக்கும் அங்குசம் போலவும், ஒய் (y) வடிவத்தையும் கொண்டிருக்கும்.இதன் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

மூலம் நட்சத்திரக்காரர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். எவரையும் அடக்கி ஆள்பவர்கள். வெற்றியைத் தவிர வேறு எதையும் அறியாதவர்கள். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயம் என்பதே அறியாதவர்களாகவும், தோல்வி என்பதை சந்திக்காதவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அதாவது மூல நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் வேறு எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் வெற்றியைத் தவிர வேறு எதையுமே வாழ்க்கையில் சந்திக்க மாட்டார்கள்.

மூலம் நட்சத்திரம் தவிர மற்ற எல்லா நட்சத்திரத்திற்கும் பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும். அதுமட்டுமல்ல ஒரே நட்சத்திர ஆண் பெண் ஜாதகத்தை இணைக்கக்கூடாது என்பதும் ஜோதிட விதி. ஆனால், மூல நட்சத்திர ஜாதகம் வந்தால் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு? அதுமட்டுமல்ல “மூல நட்சத்திர பெண்ணுக்கு மூல நட்சத்திர ஆண் ஜாதகத்தை தாராளமாகச் சேர்க்கலாம்” என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி.

எந்த ஜாதகமாக இருந்தாலும் அவரவர் விதிப்பயனை நிர்ணயம் செய்யுமே ஒழிய வரக்கூடிய பெண்ணால் மாமனாருக்கோ அல்லது மாமியாருக்கோ ஆகாது உயிருக்கு ஆபத்து என்பதெல்லாம் கிடையாது எனவே மூலம் நட்சத்திரம் கொண்ட பெண்ணை தைரியமாக திருமணம் செய்யலாம்.-source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!