முகத்திலுள்ள தழும்பு ,பருக்கள் பிரச்சனைக்கு வெள்ளை வினிகரை பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி..?


வொயிட் வினிகர் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். இவை வீட்டை சுத்தம் செய்ய மட்டுமல்ல அழகு பாரமரிக்கு கூட பயன்படுகிறது. ஆமாங்க இவற்றில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் நமது சருமத்தில் உள்ள எண்ணிலடங்காத பிரச்சினைகளை சரி செய்கிறது.

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் பருக்கள் மற்றும் கருமை கறைகளைக்கு கூட ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.

எனவே இதை சரியான வழியில் பயன்படுத்தினால் உங்களுக்கு இருக்கும் சரும பிரச்சினைகளை எளிதாக சரி செய்து விடலாம். இந்த வொயிட் வினிகர் சரும நிறதிட்டுகள், சரும நிறமாற்றம், தழும்பு, பருக்கள் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளையும் களைகிறது.

சரி வாங்க இப்பொழுது இதை எப்படி சரியான வழியில் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

சரும நிறத்திட்டுக்கு:

1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர், 1 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 2-3 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காய வைக்கவும்

பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்

ஒரு வாரத்திற்கு ஒரு முறை என இதைச் செய்து வந்தால் உங்கள் சரும நிறத் திட்டுக்கள்


மிருதுவான சருமம் பெற :
1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர், 1 டீ ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் உலர வைக்கவும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் பட்டு போன்ற மிருதுவான சருமம் கிடைக்கும்.

கருமை திட்டுக்கு :
2 பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாக மசித்து அதனுடன் 1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர் சேர்த்து கொள்ளவும்.

இப்பொழுது இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் கருமை திட்டுகள் இல்லாத சருமத்தை பெறலாம்.


சரும துளைகளில் உள்ள அழுக்குகளை அகற்ற :
1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர், 1/2 டீ ஸ்பூன் பென்டோனைட் களிமண் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இந்த கலவையை அப்படியே முகத்தில் தடவவும்

10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்

இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் ப்ரஷ்ஷாக இருக்கும்.

சமமான சரும நிறத்திற்கு
1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும்

10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சமமான சரும நிறத்தை பெறலாம்.


வறண்ட சருமத்திற்கு
1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர் மற்றும் 2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும்

இதை உங்கள் முகத்தில் தடவி கொள்ளவும்

10 நிமிடங்கள் வரை உலர வைக்கவும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

இப்படி செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கி ஜொலிப்பான முகத்தை பெறுவீர்கள்.

முகத்தழும்புகளுக்கு
1 டீ ஸ்பூன் வொயிட் வினிகர் மற்றும் 2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் கலந்து கொள்ளவும்

நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும்

10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு லேசான க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் முகத் தழும்புகள் இல்லாத மாசற்ற முகத்தை பெறலாம்.-Source: tamil.boldsky

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி