திங்கட்கிழமையில் பிறந்தவர்களது குணாதிசயம் எப்படி இருக்கும் தெரியுமா..?


பிறந்த தேதி மற்றும் நேரம் மட்டும் தான் ஒருவருடைய குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்புகிறவர்களா? அப்படியானால் நீங்கள் நினைப்பது தவறு. ஆனால் ஜோதிடத்தின் படி, வளிமண்டல கிரகங்கள் தான் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றன. இந்த கிரகங்களின் உண்மையான முக்கியத்துவம் தான் ஒருவரது அன்றாட வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது.

ஒருவரது குணாதிசயங்கள் முதல் தொழில் வரை, இந்த கிரகங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த கிரகங்களின் முக்கியத்துவம் குறித்து அறிவியல் மற்றும் ஜோதிடத்தின் பல இடங்களில் காணலாம். அதுமட்டுமின்றி ஒரு வாரத்தின் ஏழு கிழமைகளும் ஏழு கிரகங்களின் பெயர் தான் இடப்பட்டுள்ளது. அவை ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்), செவ்வாய் (மெர்குரி), புதன் (வீனஸ்), வியாழன் (மார்ஸ்), வெள்ளி (ஜுப்பிட்டர்), சனி (சனி).

இந்த கிரகங்களை அடிப்படையாக கொண்டு தான் வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் உள்ளதாகவும் ஜோதிடம் கூறுகிறது. அதிலும் திங்கட்கிழமையில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் என்று பார்த்தால், அது சந்திரன். எனவே சந்திரனின் குணம் தான் திங்கட்கிழமையில் பிறந்தவர்களுக்கு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.

சரி, இப்போது திங்கட்கிழமையில் பிறந்தவர்களது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக காண்போம்.

திங்கட்கிழமையில் பிறந்தவர்களின் படைப்பாற்றல் பெரும்பாலும் உன்னத உச்சத்தில் இருக்கும். ஆனால் அதை மற்றவர்களிடம் எளிதில் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். சந்திரன் ஆளும் திங்கட்கிழமையில் பிறந்தவர்கள், அமைதியானவராகவும், உணர்ச்சிமிக்கவராகவும் இருப்பர். மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பர். அதிகம் பதற்றம் கொள்வார்கள்.


சந்திரன் ஆளும் திங்கட்கிழமையில் பிறந்தவர்கள், தங்களுக்கான நண்பர்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் அதிக முக்கியதுவம் கொடுப்பவர்களாக இருப்பர். கள்ளத்தனம் கொண்டவர்களை இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களை விட, சந்திரனின் வடிவமும், சுழற்சியிலும் அடிக்கடி மாற்றம் ஏற்படும். ஆகவே இந்த கிழமையில் பிறந்தவர்கள் நிலையாக இல்லாமல், அடிக்கடி ஏற்ற இறக்க மனநிலையிலேயே இருப்பர். மற்றவர்களால் எளிதில் கட்டுப்படுத்தப்பவர்களாகவும் இருப்பர். இதனால் இவர்கள் சற்று பலவீனமானவர்களாவும், பாதுகாப்பின்மையையும் உணர்வார்கள்.

திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல படைப்புத்திறன் கொண்டவர்களாதலால், கலைத்திறன், கல்வி மற்றும் திறமை சார்ந்த தொழில்கள் போன்றவை, அவர்களது உண்மையான திறன்களை ஆராய்வதற்கு சிறந்ததாக இருக்கும். இவர்களுக்கு நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.

திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல தலைவர்களுக்கான குணத்தைக் கொண்டவர்களாகவும், தொழிலில் நன்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பர். மேலும் இவர்களது சிறப்பான அறிவாற்றலால் என்ன செய்தால் பணத்தை சேர்க்க முடியும் என நன்கு தெரியும்.


திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் சென்சிடிவ் மற்றும் உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்கள் தங்கள் நேரத்தை குடும்பத்தினருடனும், நண்பர்களுடனுமே செலவழிக்க விரும்புவர். இவர்கள் அமைதி விரும்பி என்பதால், எந்த ஒரு உறவையும் சண்டை சச்சரவின்றி, அமைதியாக கொண்டு செல்வர். இதற்கு சாந்த குணம் கொண்ட சந்திரன் ஆள்வது தான் காரணம்.

திங்கட்கிழமையில் பிறந்த பெண்கள் நல்ல தாயாகவும், மனைவியாகவும், குடும்பத்தை நல்லபடியாக நடத்திச் செல்பவராகவும் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு குடும்பத்தை எப்படி ஒன்றாக இணைத்து நடத்துவது என்று நன்கு தெரியும்.

திங்கட்கிழமையில் பிறந்த ஆண்கள், தங்கள் மனைவியைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளத் தெரிந்தவர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்த ஆண்கள் ஒழுக்கமான வாழ்க்கையை வாழவும், தன் காதல் வாழ்க்கையை சிறப்பாகவும் பராமரிக்கத் தெரிந்தவர்களாகவும் இருப்பர்.

மொத்தத்தில் திங்கட்கிழமையில் பிறந்தவர்கள், ஈர்க்கக்கூடிய நபராகவும், கருணை உள்ளம் கொண்டவராகவும், எளிமையானவராகவும், அமைதியானவராகவும், மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும், எதிலும் நிலையில்லாதவராகவும், பொசசிவ் குணம் கொண்டவராகவும் இருப்பர்.-Source: tamil.boldsky

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05