கோவிலுக்கு பரிகாரம் செய்ய போறீங்களா?அப்போ இத கண்டிப்பாக மறக்காதீங்க..!

ஜாதக ரீதியான தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோவிலுக்கு செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விஷயங்களை கடைபிடிக்க வில்லையென்றால் பரிகாரங்கள் கண்டிப்பாக பலன் அளிக்காது.

ஆலய நுழை வாசலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரை தெளிக்க வேண்டாம்.

முதல் நாள் இரவே பரிகார தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

குடும்பத்தோடு செல்வது நல்லது. அதற்காக வாரக்கணக்கில் தாமதப்படுத்துவது கூடாது

யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

போகும்போதோ வரும் போதோ குலதெய்வத்தை வழிபடலாம்.

தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பரிகார பூஜையும் பலன் தராது.

பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்ய வேண்டும்

ஆலயம் வர இயலாதவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள் மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலித்தமாகும்.

முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது.

பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஓரையில் செய்யுங்கள்

பூஜைக்கு பிறந்த நட்சத்திரம் , ஜென்ம நட்சத்திரம் அல்லது அமாவாசை, பவுர்ணமி, சித்திரை 1 போன்றவை உகந்தவை

பரிகாரம் செய்ய செல்வதற்கு முன் 1 நாளும், பின்னர் 1 நாளும் இறந்தவர், தீட்டு வீட்டிற்கு செல்லாதீர்கள்

காலையில் அணிந்த உடையில் மாலையில் பரிகாரத்திற்கு அணியாதீர்கள்

ராகு கால பூஜையை தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

பூஜை சாமான்களை கையில் , பிளாஸ்டிக் கவரில் கொடுக்காமல், பித்தளை, எவர்சில்வர் தாம்பாளம், கூடை ஆகியவற்றில் வைத்து கொடுங்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!