ஐந்து முகங்களோடு ஆஞ்சநேயர் காட்சி தருவதற்கு என்ன காரணம்?

தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்தார்.

நாம் ஒரு இராவணன் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இரண்டு இராவணன்கள் உண்டு. இருவரும் நண்பர்கள். இரண்டாம் இராவணனுக்கு மஹிராவணன் என்று பெயர். இராமனோடு போர் புரிந்த இராவணன், தன் ஆயுதங்களை இழந்து நின்றான்.

கருணா மூர்த்தியான இராமன், இன்று போய் நாளை வா என்றார். அவன் திருந்துவான் என்றே இராமர் நினைத்தார். ஆனால், அவன் பாதாளலோகம் சென்றான்.அங்கு தன் நண்பனான மஹிராவணனின் உதவியை நாடினான். இதை அறிந்த ஆஞ்சநேயர், மஹிராவணனோடு போர் செய்ய பாதாள லோகம் சென்றார்.

அப்போது கடுமையான யாகம் ஒன்று ராம லஷ்மணர்களை அழிப்பதற்காக மஹிராவணன் செய்துகொண்டிருந்தான். அதை தடுக்க விஸ்வரூபம் எடுத்தார் ஆஞ்சநேயர். தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்தார்.

பயங்கரமான போர் மூண்டது. கொடியவன் மஹிராவணன் மாண்டான். மஹிராவணனை அழிக்க எடுத்த விஸ்வரூப தரிசனம் தான்பஞ்சமுக ஆஞ்சநேயர் வடிவம். கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!